118 குழந்தைகளை தத்தெடுத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

  0
  3
  Mother

  சீனாவில் 118 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  சீனாவில் 118 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  சீனாவை சேர்ந்த லீ யன்சியா என்பவர் 118 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தாயாக  இருந்துவந்தார். இரும்பு சம்மந்தமான தொழில் செய்து கோடீஸ்வரியாக உயர்ந்த லீ மீது மோசடி வழக்கு தொடரபட்டது. 1996ஆம் ஆண்டு முதல் குழந்தையை தத்தெடுக்க ஆரம்பித்த அவர், தற்போது வரை 118 குழந்தைகளுக்கு அடைகலம் கொடுத்துவருகிறார். 

  இந்நிலையில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் லீயை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 2011 – 2018 காலக்கட்டத்தில் மோசடி, பணம் பறித்தல், சட்டத்தை மீறியது போன்ற செயல்களில் லீ ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. விசாரணையில் லீ குற்றாவாளி என நிரூபணமானதால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது