11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு !

  0
  22
   public exam

  11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியானது. 

  10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு மட்டுமே பொதுத் தேர்வுகள் இருந்து வந்து நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, 11 ஆம் வகுப்பு மாணவர்களும் பொதுத் தேர்வு எழுதி வருகின்றனர். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை சமீபத்தில் வெளியானது. 

  ttn

  அதன் படி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 ஆம்  தேதி தொடங்கி வரையிலும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. பொதுத் தேர்வுகளுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான  பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.