11 ஆம் வகுப்பு மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி..! யார் காரணம் ..?!

  0
  1
  Suicide Attempt

  இக்காலகட்டத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

  பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகமாக எடுப்பதும் குறைவாக எடுப்பதும் வழக்கமானது தான். பெற்றோர்கள் சிலர் அளித்த புகாரால் இனிமேல் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. அடிக்கவும் கூடாது திட்டவும் கூடாது, ஆனால் பிள்ளைகள் நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறுவது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இக்காலகட்டத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

  Suicide attempt

  திருச்சி மேல்பத்தூர் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி, 3 ஆம் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அம்மாணவி உயிர் பிழைத்ததால், அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது பள்ளியில் நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் தலைமை ஆசிரியர் திட்டியதால் தற்கொலை முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.