108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம்! – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

  0
  1
  ttv-dhinakaran

  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று அம்மா மாக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று அம்மா மாக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

  108-ambulance

  தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகம் முழுக்க தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தனியார் நிறுவனம் இயக்குவதால், கொரோனா பாதிப்பு காலத்தில் அவர்களுக்கு எந்த உதவித் தொகையும் கிடைக்கவில்லை. தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

  இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

  தமிழகம் முழுவதிலும் உள்ள 5,000க்கும் மேற்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் என்பதை அரசு மறந்துவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.