100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த  “காந்தக் கண்ணழகி” பாடல்

    0
    14
    காந்த கண்ணழகி பாடல்

    மிஸ்டர் லோக்கல் படத்திற்குப் பிறகு பாண்டி ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் நம்மவீட்டுப்பிள்ளை. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். பாரதிராஜா, யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில் இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காந்தக் கண்ணழகி பாடலின் வீடியோ யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றது. 100 மில்லியன் பார்வையாளார்களை கடந்த 9 ஆவது தமிழ் வீடியோ பாடல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.