100 கோடி வசூல் செய்த நேர்கொண்ட பார்வை!

  0
  5
  NKP

  அஜித் குமார் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

  அஜித் குமார் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

  அமித்தாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் எச். வினோத் இயக்கினார். பெண்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த 8 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் மட்டும் 700 திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் முதல் இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர் ராகுல் கூறியுள்ளார். இந்த படத்தில் அஜித்துடன், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.