100 கோடி சொத்து விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் மனைவி புகார்!

  18
  Jotheeswari

  ஜே.கே.ரித்தீஷ் சொத்துக்களை சிலர் அபகரிக்க நினைப்பதாகவும், குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுவதாகவும் அவருடைய மனைவி ஜோதீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் திடீர் மாரடைப்பால் ஏப்ரல் 13ம் தேதி உயிரிழந்தார். அவருடைய சொத்துக்களை சிலர் அபகரிக்க நினைப்பதாகவும், குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுவதாகவும் அவருடைய மனைவி ஜோதீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விவரம் என்னவென்றால், சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்திலுமே வில்லங்கம் உள்ளதை தெரிந்த மறைந்த ரித்தீஷ் அவற்றை குறைந்த விலைக்கு வாங்க ஒப்பந்தம் போட்டு 5 கோடி ரூபாய் முன்பணமும் கொடுத்திருக்கிறார். முன்பணம் தந்துவிட்டதால், ஆறு சொத்துக்களில் தியாகராய நகரிலும் திருவான்மியூரிலும் இருக்கும் வீடுகளும் ரித்தீஷ் வசம் வந்துவிட்டன.

  JK Rithesh family

  மீதப்பணத்தை தருவதற்குள் ரித்தீஷ் எதிர்பாராதவிதமாக இறந்து போகிறார். இந்நிலையில், ரித்தீஷின் தொழில்முறை நண்பர்கள்மூலம் மேற்படி சொத்துவிவரம் ஜோதீஷ்வரிக்கு தெரியவரும்போது, மீதப்பணத்தை தன்னால் தரமுடியாது என்றும், கணவர் தந்த 5 கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையை திருப்பித்தந்தால், வீடுகளை காலிசெய்துவிடுவதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், அட்வான்ஸ் தொகை முழுவதும் தங்கள் பணம் என்றும், ரித்தீஷின் பங்கு எதுவுமில்லை என்றும், உடனடியாக வீட்டை காலி செய்யுமாறும், குழந்தைக்கு கொலை மிரட்டல்  விடுப்பதாகவும் ஜோதீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.