100வது நாளாம்…உங்க ஊர்ல எங்கயாவது ‘பேட்ட’ படம் ஓடுதா பாஸ்…ப்ளீஸ் சொல்லுங்க…

  0
  5
  ரஜினி- கார்த்திக் சுப்புராஜ்

  எந்த தியேட்டரில் எத்தனை காட்சிகள் என்ற தகவல்கள் இல்லாமல் ‘பேட்ட’ படத்துக்கு இன்று 100வது நாள்…மாபெரும் வெற்றிப் படமாக்கித் தந்த தலைவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றியோ நன்றி’ என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜை  விஸ்வாசமான அஜீத் ரசிகர்கள் மட்டமான கமெண்டுகளால் கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர்.

  petta

  ஜனவரி 10 அன்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள் இன்று 100 வது நாளை நிறைவு செய்கின்றன். ஆனால் இரு படங்களும் எந்த ஒரு ஊரிலும் சிங்கிள் காட்சியாகக் கூட ஓடுவதாகத் தகவல் இல்லை. அதையும் மீறி காலை முதலே அஜீத் ரசிகர்கள் விஸ்வாசம் 100 வது நாள் போஸ்டர் டிசைன்களே தாங்களே டிசைன் செய்து வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்து வந்தார்கள்.

  petta

  இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சில மணி நேரங்களுக்கு ‘பேட்ட’ படத்தின் 100வது டிசைனை வெளியிட்டு தனது மகிழ்ச்சிச் செய்தியையும் அப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் பகிர்ந்திருக்கிறார். அஜீத் ரசிகர் என்றால் ரஜினி படத்துக்கு எதிராகப் பொங்க வேண்டும் என்பதுதானே சமீபகால வழக்கம்.

  உடனே கார்த்திக் சுப்பாராஜின் கமெண்ட் பாக்ஸுக்குள் புகுந்து சகிக்க முடியாத கெட்டகெட்ட வார்த்தைகளில் ரஜினியை, கார்த்திக் சுப்பாராஜை, ரஜினி ரசிகர்களைக் கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

  100வது நாளிலும் இப்படி உற்சாகமாகக் கட்டி உருளுவதற்கும் ஒரு தனி எனர்ஜி தேவைதான்.கிளப்புங்கய்யா கிளப்புங்க…

  இதையும் படிங்க: விஜய்க்கு வந்த சோதனை: சர்காரை தொடர்ந்து நீதிமன்றம் சென்ற தளபதி 63!