10 வறட்டி 214 ரூபாய்… அமெரிக்காவில் சாக்கபோடு போடும் மாட்டு சாணம்!

  0
  27
   பசு மாட்டு சாண வறட்டி

  அமெரிக்காவில் பசு மாட்டு சாண வறட்டி ஷாப்பிங் மார்க்கெட்களில் அதிக அளவில் விற்பனையாவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
  அமெரிக்காவுக்கு அதிக அளவில் இந்துக்கள் பணி நிமித்தமாக சென்றுள்ளனர். அங்கு ஹோமம் வளர்ப்பது உள்ளிட்டவற்றுக்கு சுத்தமான பசு மாட்டு சாண வறட்டி தேவைப்படுகிறது. பூஜைக்கு ஏற்ற பசு சாண வறட்டி தற்போது சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 

  cow dung

  நியூஜெர்சியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வறட்டியை சமர் ஹலான்கர் என்பவர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், 10 மாட்டுச் சாண வறட்டி 2.99 டாலருக்கு அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 214க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது . நல்லவேளையாக, அதில் பூஜைக்கு மட்டுமே, சாப்பிட இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுவிட்டனர். என்ன, ஏது என்று தெரியாத அமெரிக்கர்கள் அதை வாங்கி சாப்பிடாமல் தப்பித்தார்கள்! இந்தியாவில் ஆன்லைனில் கோமியம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இங்கேயும் கூட வறட்டி ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.