10 வயது சிறுமியிடம் நடுரோட்டில் அத்துமீறிய 73 வயது முதியவர்… சென்னை அம்பத்தூரில் பரபரப்பு!

  0
  1
  அம்பத்தூர்

  வழக்கமாக மாலை நேரத்தில் டியூசன் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 30 ஆம் தேதி  டியூசன் முடிந்து வீட்டுக்கு லெனின் நகர், 10வது மெயின் ரோட்டில் வழியாக சென்றுள்ளனர்.

  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் சென்னை அம்பத்தூர் பகுதியிலுள்ள லெனின் நகர், 2வது மெயின் ரோட்டில் வரும் தம்பதிக்கு 6 வயதிலும் 10 வயதிலும் என இரு மகள்கள் உள்ளனர்.

  ttn

  இவர்கள் வழக்கமாக மாலை நேரத்தில் டியூசன் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 30 ஆம் தேதி  டியூசன் முடிந்து வீட்டுக்கு லெனின் நகர், 10வது மெயின் ரோட்டில் வழியாக சென்றுள்ளனர்.

  ttn

  அப்போது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரமூர்த்தி (73) என்பவர் 10 வயது சிறுமியை தனியாக பேசி அழைத்து சென்று கன்னத்தில் முத்தமிட்டதுடன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி அலறி கூச்சலிட அங்கிருந்து சுந்தரமூர்த்தி ஓடியுள்ளார். பின்னர் அங்கு வந்த பொதுமக்கள் சிறுமியை மீட்டு  வீட்டில் பத்திரமாகச் சேர்த்தனர். 

  ttn

  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  தலைமறைவான சுந்தர மூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.