10 வது பாஸானா ரூ.35400 சம்பளம்! எப்படி விண்ணப்பிப்பது?

  0
  3
  பாபா அணு ஆராய்ச்சி மையம்

  தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் நிறையவே இருந்து வந்தாலும், வேலை காலியில்லை என்கிற ஒற்றை வரியையே பலரும் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் நிறையவே இருந்து வந்தாலும், வேலை காலியில்லை என்கிற ஒற்றை வரியையே பலரும் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.   பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை விண்ணப்பிக்கச் சொல்லி மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

  பாபா அணு ஆராய்ச்சி மையம்

  டிசம்பர் 6ம் தேதி வரையில் இந்த பணியிடங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு அதிகப்பட்சமாக ரூபாய் 35400 வரை ஊதியம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பாபா அணு ஆராய்ச்சி மையம்

  மொத்தம் 92 காலியிடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது. எழுத்துத் தேர்வின் மூலமாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவி பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பம் படிவத்தின் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், கல்வி மற்றும் பிற தகுதிகள், பிறந்த தேதி மற்றும் பிற தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன், சுய கையொப்ப நகல்களுடன் விண்ணப்பித்து, உரிய தேதிக்கு முன் அனுப்ப வேண்டும். இந்த பதவிகளுக்கான பணியிடம் மும்பையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.