10 ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் திடீர் முடிவு!

  0
  2
  இன்ஃபோசிஸ்

  சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகள்  வகிக்கும் பணியாளர்கள் 2ஆயிரத்து இருநூறு பேரை வேலையை விட்டு நீக்கவும் முடிவெடுத்துள்ளது. 

  இன்ஃபோசிஸ் நிறுவனம் 10 ஆயிரம் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.

  infosys

  வருவாயை ஈட்டவும், செலவுகளை குறைக்கவும் பிரபல முன்னணி ஐடி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது. அந்த வகையில்  இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில்  இறங்கியுள்ளது. தங்கள் நிறுவனத்தில்  உயர்பதவிகள் மற்றும் மத்திய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை மூன்று மாதம் கால  அவகாசம் கொடுத்து பணியிலிருந்து நீக்கவும், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பதவிகள்  வகிக்கும் பணியாளர்கள் 2ஆயிரத்து இருநூறு பேரை வேலையை விட்டு நீக்கவும் முடிவெடுத்துள்ளது. 

  infosys

  இதே போல் மத்திய நிலையில் உள்ள 4 ஆயிரம் முதல் பத்தாயிரம் ஊழியர்கள் வரை இதனால் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். முன்னதாக காக்னிசென்ட் நிறுவனம் சுமார் 7 ஆயிரம் ஊழியர்களை அண்மையில் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.