10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்!

  0
  9
  students

  10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

  கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வந்து செல்ல பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும் தேர்வின் போது உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

  ttn

  இதனிடையே 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்த அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதாவது, வெளியூர்களில் இருக்கும் மாணவர்கள் எவ்வாறு தேர்வு எழுதுவார்கள் என்று கேள்வி எழுந்ததால் தேர்வுக்கு 3 நாட்கள் முன்னர் விடுதிகளில் தங்கிப் படித்த மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர்களுக்கு உணவு வசதி செய்து தரப்படும் என்றும் தேர்வு எழுதும் எல்லா மாணவர்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

  அதே போல வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்கள் தேர்வு எழுத மாற்று வழி செய்யப்படும் என்றும் அது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், அதன் விவரங்கள் இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதனால் இன்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.