10 ஆண் நண்பர்களுடன் சுழற்சி முறையில் பேசிக்கொண்டிருந்த ப்ளே கேர்ள் எரித்துக்கொலை!

  0
  7
  Ilegal Contact

  தூத்துக்குடியில் 10 ஆண் நண்பர்களுடன் சுழற்சி முறையில் செல்போனில் பேசி நெருக்கமாக இருந்த பெண் எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். 

  TTN

  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. கடந்த 2 ஆண்டுகளுக்கும் இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு முறைப்படி பிரிந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் தங்கியிருந்த கவிதா, அங்கிருந்த எட்வின் என்பவருடன் பழகிவந்துள்ளார். கவிதா முத்தையா புரத்திலுள்ள அக்கவுண்டன்ட் வேலைக்கும் எட்வின் ஐஸ் கம்பெனியில் வேலைக்கும் சென்று ஒரே வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி வீட்டிலிருந்து காணாமல்போன கவிதா இன்று விவேகானந்தா நகரிலுள்ள ஒரு வீட்டில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கவிதா 2ஆவது கணவர் எட்வினுக்கு தெரியாமல் ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி என்பவருடன் வசித்துவந்தது தெரியவந்தது.

  TTN

  கருப்பசாமியை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கவிதா வேலை பார்த்த இடத்தில் பல ஆண் நண்பர்களிடம் செல்போனில் பேசிவந்தது தெரியவந்தது. மேலும் கவிதா அந்த ஆண் நண்பர்களுடன் தனது ஆட்டோவில்தான் வெளியில் செல்வார் என கருப்பசாமி பகீர் வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்த விஷயமெல்லாம் எட்வினுக்கு தெரியவர கவிதாவை எச்சரித்துள்ளார். அனைத்து விஷமும் எட்வினுக்கு தெரிந்ததால் கருப்பசாமியை அழைத்த கவிதா, தன்னை வேறு இடத்தில் தங்க வைக்கும்படி கேட்டுள்ளார். அப்போது கருப்பசாமி விவேகானந்தா நகரில் தனி வீடு பார்த்து குடிவைத்துள்ளார். அந்த வீட்டில் கருப்பசாமியும், கவிதாவும் குடும்பம் நடத்திவந்திருக்கின்றனர். ஆனால் கருப்பசாமியுடன் இருந்துகொண்டு கவிதா, 5 மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் செல்போனில் உரையாடியதாக கருப்பசாமி தெரிவிக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த  கருப்பசாமி, விறகு கட்டையை எடுத்து தலையில் அடித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால் கவிதா உடலில் தீவைத்தது யார் என எனக்கு தெரியாது என்றும் கருப்பசாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கவிதாவை எரித்து கொலை செய்தது யார் ? என்பதை கண்டுபிடிக்க, கருப்பசாமி, எட்வின் ஆகிய இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்