ஹோட்டலுக்கு வா… இல்லன்னா ஜெயிலுக்கு போ! போலீஸ் என்று பொய் சொல்லி அழகியை அனுபவித்த நபர்

  0
  4
  women-tortured

  எஸ்.எஸ். கிளை போலிஸாருக்கு விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை, நான்கு பெண்கள் மட்டும் இருந்ததாக கூறியுள்ளனர்.

  மும்பையில் போலீஸ் என்று பொய் சொல்லி 29 வயது அழகியை பலாத்காரம் செய்ததாக ஒருவர் தேடப்பட்டு வருகிறார். 

  பாதிக்கப்பட்ட அந்த பெண் சலூன் ஒன்றில் வேலை பார்த்து வந்த போது, அங்கு கஸ்டமராக வரும் தீபக் என்ற நபரை சந்தித்துள்ளார். தீபக், அந்த பெண்ணை மாடலிங் துறையில் சேர்த்து விடுவதாகக் கூறி ஆடிஷனுக்கு அழைத்துள்ளார். பின்னர், அந்த பெண் பிப்ரவரி 4 அன்று இரவு ஆடிஷனுக்காக சாகி நாகாவிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டார். அதே நேரத்தில், எஸ்.எஸ். கிளை போலிஸாருக்கு விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை, நான்கு பெண்கள் மட்டும் இருந்ததாக கூறியுள்ளனர்.

  police-raid

  நான்கு பெண்களின் மீது வழக்கு பதிவு செய்த பின்னர், போலீசார் அதிகாலை 2 மணிக்கு அவர்களை விடுவித்தனர். அப்போது ஒரு நபர் தான் ஒரு போலீஸ் அதிகாரி என்றும், “ரெய்டிலிருந்து நான்தான் உன்னை காப்பாற்றினேன்” என்று கூறி, அந்தப் பெண்ணை தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண் அந்த நபருடன் சென்றுள்ளார். பின் அந்தப் பெண்ணை குர்லாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்கள் இரவு உணவு சாப்பிட்டனர். பின்னர், அருகிலுள்ள ஹோட்டலில் நிறுத்தி தன்னுடன் இரவு ஒத்துழைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுக்கவே, “இல்லையென்றால் உன்னை ​​விபச்சார குற்றச்சாட்டில் கைது செய்துவிடுவேன்” என்று மிரட்டியுள்ளார். 

  woman-abuse-8768

  மோசடி நபர், அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் மறுநாள் காலை 8 மணியளவில் வெளியேற அனுமதித்துள்ளார். இந்த சம்பவத்தைப் பற்றி தனது நண்பரிடம் அந்த பெண் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இது பற்றி போலீசில் புகார் பதிவு செய்தனர்.

  “நாங்கள் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை சரிபார்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். அவரை விரைவில் கைது செய்வோம்” என்று வி.பி.நகர் காவல் நிலைய மூத்த ஆய்வாளர் ராஜேஷ் பவார் தெரிவித்தார்.