ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி……. என்றும் மறக்கப்படாது…. இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்…..

  0
  4
  அமெரிக்க அதிபர் டிரம்ப்

  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்தார். மேலும் இந்த உதவி என்றும் மறக்கப்படாது என தெரிவித்தார்.

  மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்து இருந்தது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் உருவான சீனாவை காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரிய எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்தி பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்ததாக தெரிகிறது.

  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து

  இதனையடுத்து, அமெரிக்க நிறுவனங்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான ஆர்டரை இந்தியா அனுப்பாததால், அந்த மருந்தை உடனே அனுப்புமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து மத்திய அரசு கடந்த செவ்வாய்கிழமையன்று கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய தற்காலிகமாக அனுமதி வழங்கியது. 

  பிரதமர் மோடி

  இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், அசாராண நேரங்களில் நண்பர்கள் இடையே இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவை. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பான முடிவுக்காக இந்தியா மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி. இது மறக்கப்படாது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் உங்களது  வலுவான தலைமைக்கு நன்றி பிரதமர் மோடி என பதிவு செய்து இருந்தார்.