ஹெல்மெட் மாதிரி இனி பிளாஸ்டிக் பொருட்களுக்கும் அதிரடி நடவடிக்கை! களமிறங்கும்  மத்திய அரசு!

  0
  1
  பிளாஸ்டிக்

  நாடு முழுவதும் அமலாக்கப்பட்ட புதிய வாகன விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை பெரும் சர்ச்சையையும், வாகன ஓட்டிகளிடையே ஹெல்மெட் அணிந்து செல்ல விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதைப் போலவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கான தடையையும் அரசு பல முறை சொல்லியும், அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக பிளாஸ்டிக் பொருட்களை இன்னமும் முழு அளவில் தடை செய்யாமல் இருக்கிறார்கள்.

  plastic ban

  இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தடை செய்ய உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் உற்பத்தியை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  plastic

  ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களினால் தயாரிக்கப்படும் செயற்கையான பூக்கள், பேனர்கள், கொடிகள், பூந்தொட்டிகள், குடிநீர் பாட்டில்கள், எழுதுபொருட்கள் , கோப்பைகள், ஸ்பூன்கள், பழரசம் அருந்தும் ஸ்ட்ரா, அலங்காரப் பொருட்கள், பைகள் உள்பட எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களும் பயன்பாட்டும் இருக்கக்கூடாது என்றும் அதற்கு மாற்று முறைகளை நடைமுறைக்கு கொண்டு வருமாறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.