ஹெல்மெட் போடலைன்னா அபராதம் கிடையாது! அக்டோபர் 15 வரை ஜாலியாக சுத்துங்க

  0
  3
  ஹெல்மெட் அணியாமல் பயணம்

  மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்கீழ் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அபராதம் விதிக்க காலக்கெடுவை குஜராத் அரசு நீடித்துள்ளது.

  சாலைகளில் ஒழுக்கத்தை கொண்டு வரும் நோக்கிலும், உயிர் இழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. தற்போதைய திருத்தப்பட்ட சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் முன்பே விட பல மடங்கு அதிகமாகும். கடந்த 1ம் தேதி முதல் இந்த மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. 

  வாகன புகை

  இந்த புதிய சட்டத்தால் வாகன விதிமுறைகளில் ஈடுபட்டவர்கள் கடுமையான அபராதத்தை செலுத்தினர். இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதாக குரல்கள் எழ தொடங்கியது. இதனையடுத்து சில மாநிலங்கள் அபாரத தொகையை குறைத்தன. இந்நிலையில், குஜராத் அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஹெல்மெட் மற்றும் பி.யூ.சி. ஆகிய விதிமுறைகளின்கீழ் அபராதம் விதிக்க காலக்கெடு கொண்டு வந்தது

  இந்நிலையில்,குஜராத் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில்,மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் அபராதம் விதிப்பதற்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க முடிவு எடுத்தது. ஹெல்மெட் மற்றும் மாசுகட்டுப்பாட்டு சான்றிதழ் (பி.யூ.சி.) விதிமுறைகளில் மட்டுமே காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. முதலில் வாகனங்களுக்கான பி.யூசி. சான்றிதழ் எடுக்க செப்டம்பர் 30ம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதால் பி.யூசி. சான்றிதழ் எடுக்க கூடுதலாக 15 நாள் அவகாசம் வாகன உரிமையாளர்களுக்கு கிடைத்துள்ளது.

  வாகன புகை

  மேலும், அக்டோபர் 15ம் தேதி ஹெல்மெட் போடாமல் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் எனவும் முடிவு அம்மாநில செய்துள்ளது. இந்த காலக்கெடு போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணக்கமா செயல்பட மக்களுக்கு போதுமானதாக இருக்கும் என குஜராத் அரசு தெரிவித்தது.