ஹெல்மெட்டுக்காக தீக்குளிக்க முயன்ற வாலிபர்…! அதிர்ச்சியில் படபடத்த போலீசார்!

  0
  4
   போலீசார்

  மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் இன்று வரையில் விவாத பொருளாக தான் இருக்கிறது. எதிர்ப்பும், ஆதரவு குரல்களும் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இப்படி அபராத தொகையை உயர்த்துவதால், இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்று மத்திய அரசு கூறினாலும், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என சில மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

  traffic

  இந்தியா முழுவதுமே எல்லா மாநிலங்களிலும் இந்த அபராத தொகை உயர்வினால், வாகன ஓட்டிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, போலீசாரின் கெடுபிடியினால் நடுரோட்டில் வாலிபர் ஒருவர், அவரது பைக்கை தீ வைத்து கொளுத்தி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பீகாரின் பூர்னியா பகுதியில் சத்யம் சின்ஹா என்பவரை போலீசார் ஹெல்மெட் அணியாததற்காக நிறுத்தி அபராதம் விதித்தனர். அதற்கு முன் தினம் தான் ஹெல்மெட் அணியாததற்காக அபராதம் கட்டிய சத்யம், புது ஹெல்மெட் வாங்குவதற்காக தான் சென்று கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. போலீசாரிடம் இதைச் சொல்லியும், கண்டுக் கொள்ளாத போலீசார் அபராத ரசீது கொடுப்பதிலேயே தீவிரமாக இருந்துள்ளனர். விரக்தியடைந்த சத்யம், அதே இடத்தில் தனது வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து உடல் மீது தெளித்துக் கொள்ள ஆரம்பித்தார். தற்கொலைக்கு முயல்வதைத் தெரிந்து கொண்டு வெடவெடத்துப் போன போலீசார், அவசர அவசரமாக அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினார்கள்.