’ஹெச்.ராஜாவைப் புடிச்சி உள்ளே போடுங்க சார்’…இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு ஆதரவாகத் திரண்ட வக்கீல்கள்…

  0
  7
  pa-ranjith

  பாலிமர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக சாதிய வன்மத்துடனான பதிவுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  ’மன்னர் ராஜராஜ சோழனின் ஆட்சியை விமர்சித்த காரணத்துக்காக பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் மனைவி மற்றும் பெண் குழந்தையின் படத்தை வெளியிட்டு அவதூறு செய்கிறார். எனவே அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’என  வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  ranjith

  சென்னை மயிலாப்பூரிலுள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று (ஜூன் 17) வழக்கறிஞர் உதயபானு தலைமையில் சென்ற தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இம்மனுவை அளித்தனர்.அதில், “அரசியலமைப்பு ச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை நசுக்கும் வகையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாலிமர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் இயக்குநர் ரஞ்சித்துக்கு எதிராக சாதிய வன்மத்துடனான பதிவுகளைத் தடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

  ranjith

  மேலும், “ரஞ்சித் மீது குற்ற எண்ணத்துடன் அவரின் மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோர் உள்ள குடும்பப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதன் மூலம் பட்டியலின மக்களைத் தூண்டி சட்டம் – ஒழுங்கு மற்றும் சமூக அமைதியைச் சீர்குலைக்க முயலும் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், “ரஞ்சித் குடும்பத்தினரின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வன்கொடுமை நடத்தியிருக்கிறார் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. இதுபோன்று செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

  letter

  தொடர்ந்து, “தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைத்தான் ரஞ்சித் பேசியுள்ளார். அந்தப் புத்தகத்துக்கான அணிந்துரையையும் கலைஞர் எழுதியுள்ளார். மேலும், ராஜராஜ சோழன் என்கிற தனிப்பட்டவரை ரஞ்சித் விமர்சிக்கவில்லை. அவரது ஆட்சியைத்தான் விமர்சிக்கிறார். அது தவறாக இருக்க முடியாது” என்றும் விளக்கம் அளித்தனர்.