ஹூவாய் நிறுவனத்திற்கு இந்தியாவில் தடையா…மத்திய அரசு விளக்கம்!

  0
  1
  h

  ஹுவாய் நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

  டெல்லி: ஹுவாய் நிறுவனத்திற்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்தி குறித்து மத்திய தொலைத்தொடர்பு செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

  ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட போவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் தொடர்ந்து வலம் வருகின்றன. ஹுவாய் ஸ்மார்ட்போன்களுக்கு பல நாடுகளில் தடை என்ற வதந்தியால் மக்களிடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

  இதுதொடர்பாக தொலைத் தொடர்பு செயலாளர் அருணா சுந்தர ராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  அவர் பேசுகையில், “இந்தியாவை பொறுத்தவரை ஹூவாய் நிறுவனத்திற்கு 5ஜி டேட்டா சோதிப்பதற்கு மட்டுமே தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு 5ஜி டேட்டாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தொழில்நுட்பத்தை முழுவதுமாக அமல் படுத்துவதற்கு முன்னர் அரசு சோதனை நடத்த மட்டுமே அனுமதிக்கும்” என்று கூறினார்.

  அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சீன நிறுவனமான ஹூவாயின் சாதனங்களை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முன்னதாக இந்த பிராண்டை இந்தியாவில் தடை செய்ய இன்னும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கடந்த வாரம் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.