ஹிட்லர் வரிசையில் அமித்ஷா பெயர் இடம்பெறும்! – ஓவைசி கடும் தாக்கு

  0
  1
  ஓவைசி

  குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்ததன் மூலம் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் வரிசையில் அமித்ஷா இடம் பெறுவார் என்று நாடாளுமன்றத்தில் அசாதுதின் ஓவைசி எச்சரக்கைவிடுத்துள்ளார்.

  குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்ததன் மூலம் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லர் வரிசையில் அமித்ஷா இடம் பெறுவார் என்று நாடாளுமன்றத்தில் அசாதுதின் ஓவைசி எச்சரக்கைவிடுத்துள்ளார்.
  குடியுரிமை திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைசி இந்த மசோதாவுக்கு எதிராக பேசினார்.

  owaisi

  அப்போது, “நம்முடைய நாட்டை இதுபோன்ற சட்டத்திலிருந்தும் ஹிட்லர் கொண்டுவந்த மோசமான நியூரம்பெர்க் இனச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் ஹிட்லர் வரிசையில் நம்முடைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெறுவதையும் தடுக்கும்படி நாங்கள் உங்களை (சபாநாயகர்) கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

  amitsha

  இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம் தெரிவித்தார். “இதுபோன்ற நாடாளுமன்றத்திற்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்” என்றார். ஓவைசியின் பேச்சு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.