ஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி! தக்க சமயத்தில் உதவிய காவலர்!!

  0
  16
  school exam

  கொல்கத்தாவில் இந்தி தேர்வுக்கு ஹால்டிக்கெட்டை கொண்டுவர மறந்த மாணவிக்கு மாநகர் காவல் அதிகாரி ஒருவர் உதவி செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  கொல்கத்தாவில் இந்தி தேர்வுக்கு ஹால்டிக்கெட்டை கொண்டுவர மறந்த மாணவிக்கு மாநகர் காவல் அதிகாரி ஒருவர் உதவி செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  கொல்கத்தாவை சேர்ந்தவர் குர்ரே. இவர் ஜைஸ்வால் பிந்த்யாமந்திர் பெண்கள் பள்ளியில் தட்சிண பாரத் இந்தி பிரசார் சபா நடைபெற்ர மத்தியமா தேர்வை எழுத வந்திருந்தார். தேர்வு தொடங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு பள்ளிக்கு வந்தார் குர்ரே. தாமதமாக வந்த குர்ரேவிடம் ஹால் டிக்கெட் இல்லாததால் தேர்வு கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் மனமுடைந்த குர்ரே தேர்வு எழுதும் மையத்திலேயே அழுதுள்ளார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்குசென்ற உல்டாதங்கா போக்குவரத்து காவலர் மாலிக், அழுதுகொண்டிருந்த குர்ரேவை சமாதானப்படுத்தி, தேர்வு எழுத தான் உதவுவதாக தெரிவித்தார்.  பின்பு தேர்வு கண்காணிப்பாளரிடம் தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை என்றாலும் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

  Exam

  இதனையடுத்து உடனடியாக குர்ரேவின் வீட்டுக்கு தொலைப்பேசியில் அழைத்த மாலிக், குர்ரேவின் ஹால்டிக்கெட்டை எடுத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.5.5 கிலோமீட்டர் தொலைவிலிருந்த குர்ரேவின் வீட்டிற்கு 10 நிமிடத்துக்குள் சென்று அவரது ஹால்டிக்கெட்டை கொண்டுவந்து கொடுத்து அவரை தேர்வெழுத வைத்துள்ளார். இதனால் காவலர் மாலிக்குக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.