ஹவாய் தீவில் கருணைகொலை செய்யப்பட்ட 4 திமிங்கிலங்கள்!

  0
  1
  melon headed whales

  பத்தில் நான்கு திமிங்கிலங்கள் எவ்வளவு மருத்துவ சிகிச்சை அளித்தாலும் உயிர்பிழைக்க முடியாத நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததால், அந்த நான்கு திமிங்கிலங்களுக்கு மட்டும் மயக்க ஊசி போட்டு, மனிதாபிமான(!) முறையில் கருணை கொலை செய்யப்பட்டன. மீதமிருந்த ஆறு திமிங்கிலங்களும் சிகிச்சைக்குப் பிறகு ஆழ்கடலுக்கு கொண்டுபோய் விடப்பட்டன.

  ஹவாய் தீவின் மாய் கடற்கரையோரம் உயிருக்கு போராடும் நிலையில் 10 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. அதிகாரிகள் கவனத்துக்கு விஷயம் வந்தப்பிறகு உரிய மருத்துவர்களைக்கொண்டு கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள் சோதிக்கப்பட்டன. பத்தில் நான்கு திமிங்கிலங்கள் எவ்வளவு மருத்துவ சிகிச்சை அளித்தாலும் உயிர்பிழைக்க முடியாத நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததால், அந்த நான்கு திமிங்கிலங்களுக்கு மட்டும் மயக்க ஊசி போட்டு, மனிதாபிமான(!) முறையில் கருணை கொலை செய்யப்பட்டன. மீதமிருந்த ஆறு திமிங்கிலங்களும் சிகிச்சைக்குப் பிறகு ஆழ்கடலுக்கு கொண்டுபோய் விடப்பட்டன.

  Whales treated

  திமிங்கிலங்கள் கூட்டமாக அடிபட்டு கரை ஒதுங்குவதற்கான காரணத்தை ஆராய்வதற்காக இறந்த 4 திமிங்கிலங்களின் உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே ஹவாய் தீவின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், அந்த திமிங்கிலங்களை கருணை கொலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திமிங்கிலங்கள் கடல்தாயின் குழந்தைகள் எனவும், வாழ்வோ சாவோ அதனை திமிங்கிலங்களிடமே விட்டுவிடவேண்டும் எனவும் அதிகாரிகளிடம் போராடினர். ஆனால், அதிகார்கள் அவற்றுக்கு செவிமடுக்கவில்லை. ஆயினும், திமிங்கிலங்கள் இறந்தபின்னர் அவற்றுக்காக பழங்குடியினர் அவர்கள் வழிமுறையில் வழிபாடு நடத்தினர்.