ஹர்பஜன் சிங்- லாஸ்லியா உடன் இணையும் பிரபல ஹீரோ!

  0
  5
  losliya with harbhajan

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இவர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கும் ஃபிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் அறிமுக நாயகனாக களமிறங்குகிறார்.  இயக்கும்  படத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் பதிக்க உள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா. இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

   

   

  ஹர்பஜன் சிங் நடிப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது அனைவரது தரப்பிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற ஐபிஎல் போட்டிகளுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அறிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்த படத்தில் பட்டுமின்றி டிக்கிலோனா, திருவள்ளுவர் கேரக்டரில் ஒரு வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்துவருகிறார்.