ஹரிஷ் கல்யாண் படத்தில் இணைந்த அனிருத்

  0
  3
   அனிருத்

  பியார் பிரேமா காதல்,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண்  தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார்

  நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் இசையமைப்பாளர்  அனிருத் இணைந்துள்ளார். 

  harish

  பியார் பிரேமா காதல்,இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண்  தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைப் பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகனும், இயக்குநருமான சஞ்சய் பாரதி இயக்கிவருகிறார். ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படத்தில்  முனீஷ்காந்த், ரேணுகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

  aniruth

  இந்நிலையில் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில்  பொண்ணு வேணும் என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இவர் ஏற்கனவே இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இடம்பெற்ற கண்ணம்மா பாடலை பாடியிருந்தார். இந்த பாடலானது  இளைஞர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

  முன்னதாக தனுசு ராசி நேயர்களே படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.