ஹரிஷ் கல்யாணின் பாலிவுட் பட ரீமேக்கில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

  0
  5
  நடிகர் ஹரிஷ் கல்யாண்

  நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் தாராள பிரபு படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் இணையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் தாராள பிரபு படத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் இணையுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். 

  இதற்கிடையில் அவர் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘விக்கி டோனார்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். தாராள பிரபு என்று பெயரிட்டுள்ள இப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கவுள்ளார். அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் ஹரிஷ் கல்யாணும், யாமி கவுதம் கேரக்டரில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

  vivek

  இந்த நிலையில் இதில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹிந்தி படத்தில் இருக்கும் அளவிற்கு அடல்ட் கண்டென்ட் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. பாலிவுட்டில் இப்பாடம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, சுமார் ரூ.65 கோடி வரை வசூல் சாதனை செய்து துருப்பது குறிப்பிடத்தக்கது.