ஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்

  0
  6
  honeymoon

  ஹனிமூன் என்பது ஒவ்வொரு தம்பதிகளின் வாழ்விலும், காலம் கடந்து நினைவில் நிற்கும் அழகிய அனுபவம். அந்த அனுபவத்தை இன்னும் அழகாக மாற்ற சில டிப்ஸ்.

  ஹனிமூன் என்பது ஒவ்வொரு தம்பதிகளின் வாழ்விலும், காலம் கடந்து நினைவில் நிற்கும் அழகிய அனுபவம். அந்த அனுபவத்தை இன்னும் அழகாக மாற்ற சில டிப்ஸ்.

  திருமணம் நிச்சியமாகி இருவரும் மனம்விட்டு பேசி காதலில் இருக்கும்போது ஹனிமூன் குறித்த எண்ணங்களை இருவரும் பகிர்ந்துக் கொள்வது நல்லது. உடலுறவு பற்றியோ, இருவருக்கும் இடையிலான நெருக்கம் பற்றியோ பேசி பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

  honeymoon

  வேலைப்பலு, குடும்ப பிரச்னை, திருமண டென்ஷன் அத்தனைக்கும் நடுவிலும் புதிதாக காதல் உறவு வலுப்பெறச் செய்யும் ஹனிமூன் பயணத்தை அனுபவிக்க தனிமை மிகவும் அவசியம். ஒருவரின் காதலை மற்றொருவர் உணரவும் இந்த தனிமை உதவும்.

  திருமணத்துக்கு முன்னதாக பேசிய விஷயங்களை தவிர்த்து புதிய முயற்சிகளை கையாளுங்கள். உங்கள் துணையை கவரும் வகையில் வசீகர உடையணிவது, சில சில்மிஷங்களில் ஈடுபடுவது என வித்தியாசமாக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

  honeymoon

  காம உணர்வை தூண்டும் வகையிலான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். உங்களது படுக்கையறையை கவர்ச்சிகரமாக அலங்கரித்து அசத்துங்கள். மெழுகுவர்த்தி வெளிச்சம், குறைந்த சத்தத்தில் ரொமாண்டிக் பாடல்கள், மனம் கமழும் ரூம் ஸ்ப்ரே, பெர்ஃபியூம்களை போட்டு அசத்துங்கள்.  

  honeymoon

  வம்சம் தழைக்க எண்ணி ஆரோக்கியமான உடலுறைவை மேற்கொள்ள வேண்டும். திருமண படபடப்பில் தம்பதிகள் இருவருமே உடல் அளவிலும், மன அளவிலும் சோர்வாக இருப்பார்கள். அந்த சோர்வை அதிகரிக்கச்செய்யும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

  உங்கள் துணைக்கு எதை செய்தால் பிடிக்கும் என்பதை முன்னதாகவே தெரிந்துக் கொண்டு, ஹனிமூன் பயணத்தில் அதை சர்பிரைஸ் கிப்ட் ஆக பரிசளியுங்கள். அது ஹனிமூன் பயணத்தை மட்டுமல்லாது வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத காதல் அனுபவமாக இருக்கும்.