ஸ்வீட் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை… அனுமதி கொடுத்த மம்தா பானர்ஜி அரசு

  0
  3
  mamta banerjee

  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், மருந்தகங்கள், காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

  மேற்கு வங்கத்தில் ஸ்வீட் கடைகளைத் திறக்க மம்தா பானர்ஜி அரசு அனுமதி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், மருந்தகங்கள், காய்கறி, மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

  lockdowntamilnadu

  இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஸ்வீட் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வங்காளிகள் தங்கள் உணவில் இனிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். தற்போதைய ஊரடங்கு காரணமாக இனிப்புகள் கிடைக்காமல் திண்டாடிப்போய்விட்டனர். இதனால், தினமும் நான்கு மணி நேரம் மட்டும் இனிப்பகங்களைத் திறக்க மேற்கு வங்க அரசு  அனுமதி அளித்துள்ளது.

  sweet-shop

  பிற்பகல் 12 முதல் நான்கு மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும். குறைந்த அளவிலேயே பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த வங்காளிகள் ஸ்வீட் கடைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.