ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

  17
  Greta Thunberg

  கிரெட்டா துன்பெர்க்கிற்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

  ஸ்டாக்ஹோம்: கிரெட்டா துன்பெர்க்கிற்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

  கிரெட்டா துன்பெர்க் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். வெறும் 17 வயது மட்டுமே நிரம்பிய இந்தச் சிறுமி காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் உலகம் முழுக்க ஏராளமான இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரெட்டாவும், அவரது தந்தையும் பெல்ஜியம் நாட்டிற்கு சென்றனர். அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

  ttn

  பெல்ஜியம் நாட்டிலிருந்து ஸ்வீடன் நாட்டுக்கு இருவரும் சென்றனர். இந்த நிலையில் கிரெட்டா மற்றும் அவரது தந்தைக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இருவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். இதுதொடர்பாக கிரெட்டா தன்பெர்க் தனது இன்ஸ்டாகிராமில் பதிவில் தெரிவித்துள்ளார்.

  ttn

  கடந்த 10 நாட்களாக தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பது போன்று உணர்வதாக அவர் கூறியுள்ளார். உடல் நடுக்கம், இருமல், தொண்டை கரகரப்பு உள்ளிட்ட பிரச்சனைகளும் இருப்பதாக கிரெட்டா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தாலும், இன்னும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவில்லை என கிரெட்டா துன்பெர்க் கூறியுள்ளார்.