ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு! 

  0
  3
  srivilliputhur palkova

  பால் விலை உயர்வை தொடர்ந்து பிரசித்தி பெற்ற  ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும்  தனியார் மற்றும் கூட்டுறவு பால்கோவா விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

  ஸ்ரீவில்லிபுத்தூரில் தரமான பால் மூலமாக தயாரிக்கப்படும் பால்கோவாவுக்கு மற்ற இடங்களில் தயாரிக்கப்படும் பால்கோவாவை காட்டிலும் தனிச்சுவைக் கொண்டது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதால் உலகம் முழுக்கவே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு தனி வரவேற்பு இருந்து வருகிறது. சுமார் 80 ஆண்டுகளாக இப்பகுதியில் தனித்துவத்துடன் தயாரிக்கப்படும் பால் கோவாவிற்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருந்தது. 

  srivilliputhur palkova

  இந்நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப்படும்  தனியார் மற்றும் கூட்டுறவு பால்கோவா விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கிலோ 240 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது 260 ரூபாயாக பால்கோவா விலை உயர்ந்துள்ளது.