ஸ்மோக் பண்ணா இப்படியா இருக்கும்… அதிர்ச்சியை தந்த நுரையீரல் வீடியோ!

  0
  5
  நுரையீரல்

  செயின் ஸ்மோக் செய்த நபர் ஒருவரின் நுரையீரலை அறுவைசிகிச்சைக்காக வெளியே எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செயின் ஸ்மோக் செய்த நபர் ஒருவரின் நுரையீரலை அறுவைசிகிச்சைக்காக வெளியே எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  lungs

  சீனாவைச் சேர்ந்த நபர் தன்னுடைய உடல் உறுப்புக்களை தானம் செய்ய எழுதி கொடுத்திருந்தார். எதிர்பாராத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய விருப்பப்படி, உடல் உறுப்புக்களை தானமாக எடுக்க மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மேற்கொண்டனர். 
  நுரையீரல் பகுதியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்… செயின் ஸ்மோக்கராக அந்த நபர் இருந்துள்ளதால் நுரையீரல் தாரில் முக்கி எடுத்ததுபோல இருந்தது. இதனால், அவருடைய ஆசைப்படி தானமாகக் கூட நுரையீரலை அளிக்க முடியவில்லை. மருத்துவர்களின் முயற்சியும் வீணானது.

  lungs

  தானமாக எடுக்க முயன்ற வீடியோவை டாக்டர் வெளியிட்டுள்ளார். 30 விநாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவை கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் பார்த்துள்ளனர்.