ஸ்மார்ட்போனில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் வாழும்?

  0
  5
  coronavirus

  ஸ்மார்ட்போனில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

  ஜெனீவா: ஸ்மார்ட்போனில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

  ஸ்மார்ட்போன்கள் என்பது அதிகம் பயன்படுத்தப்படும் கேஜெட்களில் ஒன்றாகும். அதனால் தானாகவே கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் தங்கும் இடமாக ஸ்மார்ட்போன்கள் அமைகின்றன. ஒரு ஸ்மார்ட்போன் ஒரு நாளுக்குள் எத்தனை மேற்பரப்புகள் மற்றும் உடல் பாகங்களைத் தொடுகிறதோ அந்தளவுக்கு அதில் கிருமிகள் மற்றும் வைரஸ்கள் வாழும் கேஜெட்டாக மாறுகிறது. ஸ்மார்ட்போன்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் என்று கவலைகள் உள்ளன.

  ttn

  உலக சுகாதார அமைப்பு (WHO) ஆய்வின்படி, 2003 இல் கண்டுபிடிக்கப்பட்ட அசல் சார்ஸ்-CoV வைரஸ் ஒரு கண்ணாடி மேற்பரப்பில் 96 மணி நேரம் (நான்கு நாட்கள்) வாழும். கண்ணாடி தவிர, இது கடினமான பிளாஸ்டிக் மற்றும் எஃகு மீது சுமார் 72 மணி நேரம் (மூன்று நாட்கள்) வாழ்ந்தது என்று ஆய்வு கூறுகிறது. அந்த வகையில் பார்த்தால் கொரோனா வைரஸ் 96 மணி நேரம் (நான்கு நாட்கள்) கண்ணாடியில் இருக்க முடியும் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன்களும் ஒரு கண்ணாடி பேனலுடன் வருவதால், கொரோனா வைரஸ் ஒரு ஸ்மார்ட்போனில் நான்கு நாட்கள் வரை இருக்கும் என்று கூறலாம்.