ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவால் பலி: சோகத்தில் மூழ்கிய அரச குடும்பம்!

  0
  1
  இளவரசி மரியா தெரசா

  கொரோனா வைரஸ் ஸ்பெயின் நாட்டிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திட்டுள்ளது.

  சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. சீனாவில் இதுவரை 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸால் பல நாடுகளின் நிலை மோசமாகியுள்ள நிலையில், இத்தாலி மரணக்குழியில் தள்ளப்பட்டிருக்கிறது. உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால், அதன் பிடியில் இருந்து மக்களை காக்க உலக நாடுகள் திணறி வருகின்றன. 

  ttn

  கொரோனா வைரஸ் ஸ்பெயின் நாட்டிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திட்டுள்ளது. இதுவரை அங்கு  கொரோனாவால் 5000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா (86), கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரிட்டன் தலைநகர் பாரிஸில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளவரசி மரியாவின் மரணம் அரச குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.