ஸ்டாலினை கைது செய்யும் ஆசை நிறைவேறாது: திருமா காட்டம்!

  0
  1
  திருமாவளவன்

  புதுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சி  திருமாவளவன் கலந்து கொண்டார்

  புதுக்கோட்டை: மு.க.ஸ்டாலினை  கைது செய்யவேண்டும் என்று பா.ஜ.கவினரின் விருப்பம் நிறைவேறாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

  thiruma

  புதுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்ச்சி  திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ப.சிதம்பரத்தைப் போன்று மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பா.ஜ.க தலைவர்கள் கூறிவருவது  அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது’ என்றார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின்  வெளிநாட்டுப் பயணம் குறித்த கேள்விக்கு, ‘எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகள் குறித்த அறிக்கையை வெளியிட்ட  பிறகு அது குறித்து  விமர்சிக்க முடியும்’ என்று கூறினார்.

  stalin

  முன்னதாக பாஜக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் முன்னாள் மத்திய அமைச்சர்களுமான  ப. சிதம்பரம், டி.கே. சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஸ்டாலின் கைது செய்யப்படுவார் என்று கூறுவது அரசியல் களத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.