ஸ்டாலினுக்கு காது சவ்வு கிழிஞ்சிரும்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி

  0
  1
  ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

  அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தில் காவிரி-கோதாவரி நீர் இணைப்பு திட்டத்துக்கு குரல் எழுப்புவோம் என பேசினார். ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பது தொடர்ந்து வருகிறது.

  மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருவதையொட்டி அரசியல் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது, ஸ்டாலின் ஒரு கும்பலை சேர்த்துக் கொண்டு கூலிப்படை தலைவர் போல் செயல்படுவதாக விமர்சித்தார்.

  ed

  மேலும் அவர், அப்பாவின் ஆதரவில் அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின். அவர் மரியாதை கொடுத்து பேசினால் மரியாதை கிடைக்கும். நான் திரும்ப பேசினால் ஸ்டாலினுக்கு காது சவ்வு கிழிஞ்சிரும், நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்றார்.

  afdssd

  அதற்கு முன்பு கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து பேசியபோது, திமுக – காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் பாராளுமன்றத்தில் காவிரி-கோதாவரி நீர் இணைப்பு திட்டத்துக்கு குரல் எழுப்புவோம் என பேசினார். ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சிப்பது தொடர்ந்து வருகிறது.