ஸ்டாலினின் பதவி வெறி அவரை படுத்தியெடுக்கிறது : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!

  0
  1
  Minister Jayakumar

  இன்று 48 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக கட்சியின் தொடக்க விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.

  கடந்த 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கி வைத்தார். இன்று 48 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக கட்சியின் தொடக்க விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ், எடப்பாடி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவாகி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

  Jaya kumar

  அந்நிகழ்விற்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ஸ்டாலின் எடப்பாடியை நேரடியாக போட்டியிடத் தயாரா என்று சவால் விட்டது குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ஸ்டாலின் குழப்பத்தின் உச்சத்தில் உள்ளார் அதானல் அவர் என பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. அடுத்த தேர்தல் வரும் வரை காக்க முடியாத ஸ்டாலினின் பதவி வெறி அவரை பாடாய் படுத்துகிறது என்று கூறியுள்ளார். 

  MK Stalin

  மேலும், சசிகலா அதிமுக வில் மீண்டும் இணைவது குறித்த கேள்விக்கு, ஆடு பகை குட்டி உறவா.. சசிகலா பற்றி பேச வேண்டாம். எம்.ஜி.ஆர் துவங்கிய கட்சி நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் சசிகலா பற்றி பேசுவது தேவையற்றது என்று பதிலளித்துள்ளார்.