ஸ்டாலினால் எம்.எல்.ஏ கூட ஆக முடியாது – முதலமைச்சர் பழனிசாமி

  0
  1
  edappadi palanisamy

  விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

  முண்டியம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரித்த அவர்,  “நான் முதலமைச்சரானது விபத்து எனக் கூறிய ஸ்டாலின் திமுக தலைவரானதும் ஓர் விபத்துதான். இதையறியாமல் அவர் பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் உயர்ந்தவர்கள். எங்களை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.

  EPS

  அதிமுகவை விமர்சிப்பதை நிறுத்துவிட்டு மக்களுக்கு நல்லது செய்யாவிட்டால் ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது. திமுகவின் திண்ணைப் பிரசாரத்தால் ஒரு பயனும் இல்லை” என்று கூறினார்.