ஸ்டாண்ட் அப் காமெடி செய்து சிரிக்க வைத்த குழந்தை நட்சத்திரம் டெங்குவுக்கு பலி!

  0
  1
  Baby

  தெலுங்கு சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக அறியப்படும் கோகுல் சாய் கிருஷ்ணா டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தார்.

  தெலுங்கு சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக அறியப்படும் கோகுல் சாய் கிருஷ்ணா டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தார்.

  இந்தியாவில் சமீப காலமாக, டெங்கு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதைத் தாமதிப்பதால் ஏற்படும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் பன்மடங்கு பெருகியுள்ளன. இந்நிலையில், இந்த வருடமும் மழைக்காலம் ஆரம்பித்தவுடன் டெங்குவின் பிடியில் சிக்கியுள்ளது தென்னிந்தியா. பல மாவட்டங்களில் ஏராளமான குழந்தைகள் உட்பல பலர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகி உயிரிழக்கும் அபாயம் தொடர்கதையாகி வருகின்றன. 

  Star

  இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக அறியப்படும் கோகுல் சாய் கிருஷ்ணா டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணாவை போல் நடித்துக்காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். இவரது உயிரிழப்பு ஸ்டாண்டப் காமெடியர்களை மட்டுமின்றி, தெலுங்கு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.