‘ஷெரின் வின் பண்ணனுமா? இந்த வாரம் தங்குறாங்களா பாரு’: சாக்ஷியால் கடுப்பான முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்! 

  0
  7
  ஷெரின்

  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் மீண்டும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் விருந்தாளியாக வந்துள்ளனரா அல்லது வைல்டு கார்டு என்ட்ரியா என்பது இன்று இரவு தான் தெரியவரும். ஏற்கனவே வனிதாவால் பிக் பாஸ் வீடு பற்றி எரியும் நிலையில் இன்று என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  இந்த நிலையில் உள்ளே வந்தவுடன் சாக்ஷி, ஷெரினிடம் ‘நீ தான் இந்த கேமை ஜெயிக்க வேண்டும் ‘என்று கூறுகிறார். இதை கண்ட முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் காஜல் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஷெரின் டைட்டில் வின் பண்ணனுமா, இந்த வாரம் தங்குவாங்களான்னு பாரும்மா’ என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளார். 

  sherin

  இதை கண்ட ஷெரின் ஆர்மி ரசிகர்கள், காஜலை காறித்துப்பாத குறையாகத் திட்டி தீர்த்து வருகின்றனர்.