ஷெரின்,தர்ஷனுக்கிடையே கள்ளத்தொடர்பு!சாக்க்ஷியின் திமிர் பேச்சு! வைரலாகும் நேற்றைய எபிசோடின் வீடியோ!

  0
  1
  ஷெரின்,!சாக்க்ஷி

  இறுதி கட்டத்தை நெருங்கியிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3. வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். வனிதாவின் பேச்சுக்கு கொஞ்சமும் குறைவைக்காமல் போட்டிப் போட்டுக் கொண்டு அவருடன் பழகுபவர்களும் சரிக்கு சமமாக வார்த்தைகளில் அதகளம் செய்து வருகிறார்கள்.

  sherin

  அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் தர்ஷன் ஆகியோருக்கு இடையே உள்ள உறவை கள்ளத்தொடர்பு என்று மக்கள் நினைப்பார்கள் என்று வனிதா கூறி நெருப்பைப் பற்ற வைத்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றார் ஷெரின். இதனால் வனிதாவிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.  அதன் பின்னர் தனியாக ஷெரின் மற்றும் சாக்க்ஷி பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது வனிதா இப்படியெல்லாம் பேசினால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று அழுது கொண்டிருந்தார். அப்போது ஷெரினிடம் பேசிய சாக்க்ஷி, மத்தவங்க ஆயிரம் விஷயம் சொல்லுவாங்க, நீ ஏன் கவலை படுற. நாய்கள் ரோட்ல குறைக்கும், அதை நீ பொருட்படுத்திறியா. எனக்கு புரியுது அவங்க உன் தோழி தான் என்று கூறியதும், அதற்கு ஷெரின், நாய்கள் ரோட்டில் கொலைத்தால் நான் அதை எப்போதும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால், சொந்த நாயே என்னை கடித்தால் கவலைப்படுவேன் என்று கூறினார்.

  sakshi

  ஷெரின் இவ்வாறு கூறியதும், அதற்கு சாக்க்ஷி, நான் அதை சொல்லவில்லை. நான் வெளியே இருக்கிற மக்களை பத்தி தான் பேசுறேன். பேசுறவங்க பேசிட்டு போகட்டும். அதை பற்றி நீ ஏன் கவலைபடுற என்று கூறினார். 
  அதற்கு ஷெரினோ, நீ ஏன் மக்களை பற்றி பேசுகிற. நான் அவளை பற்றி தான் பேசுகிறேன் என்று கூறினார். சாக்க்ஷி இப்படி மக்களை நாய் என்று கேவலமாக குறிப்பிட்டதற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்!