ஷிகர் தவான் பதில் யாரு ஓபனராக இறங்கலாம்?: நடிகர் சித்தார்த் கருத்து 

  0
  1
  ஷிகர் தவான்

  இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 352 ரன்கள் அடித்து குவித்தது. ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

  இதில் போட்டியின் போது தவானுக்கு கை கட்டைவிரலில் காயம் ஏற்பட்டது. அப்போது தவானை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோதவுள்ளது. அதில் ஷிகர் தவானுக்கு பதிலாக யார் ஓபனிங் இறங்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. 

  தற்போது இது குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கையில் அடிப்பட்டிருந்தும் அவர் இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தார் என்பது நம்பமுடியாததாக இருக்கிறது. தவான் மீண்டு வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நடக்காத நிலையில் கேஎல் ராகுல் இந்தியாவின் ஓபனிங் இறங்குவதற்கு முழுத் தகுதியானவர். இது இந்திய அணிக்கு  புதிய பலத்தை அளிக்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.