ஷங்கர் படத்தில் நடிக்கும் ‘சர்வாதிகாரி’ மு.க.ஸ்டாலின்..? அனாதையாகப் போகும் தமிழ்..!

  0
  2
  ஸ்டாலின்

  சர்வாதிகாரி அப்படி என்றால் என்ன? நீங்கள் புதிதாக சங்கர் படத்தில் நடிக்கிறீர்களா? இனிமேல், இந்த தமிழை யார் வளர்ப்பது? நீங்கள் வளர்க்கவில்லை என்றால் தமிழ் அனாதையாகி விடுமே.

  சர்வாதிகாரி என திமுக தலைவர் மு.க.ஸ்ஆலின் கூறியதற்கு நாலாபுறமும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 

  இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகி ஒருவர், ‘’மகனுக்கு எழுதப் படிக்கத் தெரியாமல், அப்பா தமிழ் வளர்ப்பதும், அதற்கு இந்த இடுப்பில் துண்டு கூட இல்லாத வாழ்நாள் அடிமைகள் மாய்ந்து மாய்ந்து ஓட்டு போடுவதும் உலகமே பார்க்காத அதிசயம். மகன் பெரிய தமிழ் புலவர் மாதிரி இல்லை என்றாலும் எழுதிக் கொடுத்ததைக் கூட படிக்கமுடியாத திணறி, அதையும் மகனே ஒத்துக்கொள்ளும் அதிசயம்.! 

  stalin

  இப்போதும் இந்த அடிமைகள் விடாமல் முட்டுக் கொடுப்பது தான் ரசிக்கக்கூடிய அடிமைத்தனம்.  கருணாநிதி தமிழுக்கு தண்ணீர் ஊற்றினார். நினைவு மண்டபம் கட்டினார். ஆனால், மகன்? உங்கள் எதிர்கால மாதிரி சட்டசபையின் முதல்வர், அவருக்கே எழுத படிக்க தெரியாதவரின் மகன்  உதயநிதியை கிராமசபையில் முதல்வராக்குங்கள். 

  ஆம், சர்வாதிகாரிகள் என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள். கேட்கவும்  முடியாது. கேட்கக் கூடாது. அதையும் மீறி சில மொக்கைச்சாமிகள் ஜனநாயகம் என்ற பெயரில் கேள்வி கேட்டால், வாக்கிங் போகும்போது, சாக்கில் அள்ளி விடுவார்கள். அதுதான் நாம ஏற்கெனவே பின்பற்றும் பாரம்பரியம்? சர்வாதிகாரி அப்படி என்றால் என்ன? நீங்கள் புதிதாக சங்கர் படத்தில் நடிக்கிறீர்களா? இனிமேல், இந்த தமிழை யார் வளர்ப்பது?  நீங்கள் வளர்க்கவில்லை என்றால் தமிழ் அனாதையாகி விடுமே. 

  stalin

  ஒரு திருடன் கூட அவனுக்கென்று சில கொள்கைகள் வைத்திருப்பான். தாலி பறிப்பதில்லை, சாமி காசை திருடுவதில்லை. ஆனால் உ.பிகள்? ஆனால், திமுக இனி மெல்ல அழியும். அவர்களுக்கே தெரிந்துவிட்டது. ஆம், விகிதாசார அடிப்படியில் உறுப்பினர்களை சேர்க்கும் சட்ட திருத்தம் வேண்டும் அளவுக்கு வந்துவிட்டது. இனி, அம்பி வேஷம் போடுவார்கள் தேர்தல் வரை அதாவது, எப்போதும் நாட்டுக்கு ஒத்துவராத, ஆனால், ஒட்டு பெற்றுத்தரும் வழியை திமுக முன்னெடுத்து செல்கிறது. இந்தி எதிர்ப்பு, தனி தமிழ்நாடு, மாநில சுயாட்சி, தமிழ் ஆட்சி மொழி, தனியார் துறையில் இட ஒதுக்கீடு… இப்போது விகிதாசார அடிப்படை. காலமும், கடவுளும் தமிழகத்தையும், இந்தியாவையும் காக்கும்’’ என கொதிக்கிறார்.