வைத்தீஸ்வரன் கோயிலில் திருப்பணி! தருமபுர ஆதீனம் முடிவு!

  0
  18
  வைத்தீஸ்வரன்

  தமிழகத்தின் புகழ் பெற்ற ஆலயங்களில் வைத்தீஸ்வரன் கோயிலும் ஒன்று.  சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் இருக்கும் இந்த ஆலயம் நவகிரகங்களுக்கான வழிப்பாட்டு தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. தலத்தின் நாயகியாக தையல்நாயகி, வைத்தியநாத சுவாமி, செல்வ முத்துக்குமார சுவாமி, அங்காரகன் என்று தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

  vaitheeswaran temple

  தருமபுரம் ஆதீனத்தின் கீழ் வரும் இந்த ஆலயத்தில் விமான ராஜகோபுரங்களை பாலஸ்தாபனம் செய்வதற்கு தற்போது தருமபுர ஆதீனம் முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற திங்கள்கிழமை நவம்பா் 11ம் தேதி தருமபுரம் ஆதீனம் தலைமையில் இந்த கோயிலின் விமான ராஜகோபுரங்கள் பாலஸ்தாபனம் நடைபெறவுள்ளது.
  20ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ள திருப்பணிகளால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

  god

  நவகிரகங்களில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த தலத்தில் வந்து வேண்டிக் கொண்டு பரிகார பூஜைகளைச் செய்து வருகின்றனர். வரும் திங்களன்று காலை 9 மணிக்கு மேல்  தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் பாலஸ்தாபனம் நடைபெறவுள்ளது.