வைகுண்ட ஏகாதசி விரதம் ! விதிகளும், பலன்களும் !

  0
  1
  வைகுண்ட ஏகாதசி

  வைகுண்ட ஏகாதசி விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது, பலன்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி’நடப்பு ஆண்டில் ஜனவரி மற்றும், டிசம்பரில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. 2020-ம் ஆண்டில் 2 முறை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 

  வைகுண்ட ஏகாதசி விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது, பலன்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

  vaikunda

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி’நடப்பு ஆண்டில் ஜனவரி மற்றும், டிசம்பரில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. 2020-ம் ஆண்டில் 2 முறை சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. 

  வைகுண்ட சொர்க்கவாசல் ஜனவரி 6 அதிகாலை 4.45 மணிக்கு திறக்கப்பட்டது. இன்று முதல் இராப்பத்து தொடங்குகிறது. 
  பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, ராப்பத்து உற்சவமாக நடைபெறும். ராப்பத்தின் முதல் நாள் பரமபத வாசல் சன்னிதி திறக்கப்படும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு சென்றோர் யாரும் இல்லாததால் வைகுண்டத்தின் வாசல் மூடப்பட்டு இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று அது திறக்கப்பட்டது.

  nammalwr

  நம்மாழ்வார், பெருமாளிடம் ‘எனக்கு மட்டும் வைகுண்ட வாசலைத் திறந்தால் போதாது. என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் எல்லா பக்தர்களுக்காகவும் வைகுண்டவாசல் திறக்கப்பட வேண்டும்’ என்று வேண்டினார். பெருமாள், நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்க வழி செய்தார். அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது.
  வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முன் தினமான தசமி தினத்தில் வீட்டை கழுவி சுத்தம் செய்வது நல்லது. தசமி தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் உண்டுவிட்டு விரதம் இருக்க தொடங்க வேண்டும்.

  eating

  மறுநாள் ஏகாதசி தினத்தில் அதிகாலை வேளையான 3 முதல் 4 மணிக்குள்ளான பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்து விட்டு, பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட வேண்டும். பின்பு வீட்டிற்கு திரும்பியதும் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். துளசி இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரை தீர்த்தமாக அவ்வப்போது அருந்தலாம்.

  tulasi

  முதியோர்கள், உடல் பலவீனமானவர்கள் பெருமாளுக்கு நிவேதித்த பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம். நாள் முழுவதும் பெருமாளின் சிந்தனை மற்றும் தியானத்தில் இருந்து மவுன விரதம் கடைபிடித்தால் விரதத்தின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.

  vaikunda

  பக்தர்கள் ஏகாதசி அன்று குழுவதும் விரதமாக இருந்து பகவானுடைய நாமங்களை இரவு தூங்காமல் சொல்ல வேண்டும். மறுநாள் துவாதசி அன்று நீராடி ஆலயத்தில் பூஜை செய்வதன் மூலம் விரதம் பூர்த்தியாகிறது. ஏகாதசியன்று விரதம் இருந்தால் உடல் நலம் பெறும், மனக்கவலைகள் நீங்கும் என்று பல்லாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது.