வேஷம் போடும் அமைச்சர் வேலுமணி… கண்ணீர் வடிக்கும் மக்கள்..!

  0
  2
  தண்ணீர்

  ஓட்டு மாறி போட்டதால் எடப்பாடியும், ஓ.பிஎஸும் சென்னைவாசிகளை தண்ணீர் கொடுக்காமல் கண்ணீரில் தவிக்க விடுகிறார்கள் என சென்னைவாசிகள் புலம்பித் தவிக்கிறார்கள்.

  சென்னையில் தண்ணீர் பிரச்னையை மீடியாக்கள் தான் பெரிது படுத்துவதாக அமைச்சர் வேலுமணி உளறி தள்ளி இருக்கிறார். அவரை வடசென்னை, தென்சென்னை  பக்கம் மாறுவேடத்தில் சென்று தண்ணீர் பிரச்னையை விசாரிக்க சொல்லுங்கள் என அவருடன் இருக்கும் அடிப்பொடிகளே சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தண்ணீர் பிரச்னையை  தீர்ப்பதில் ஆர்வம் இல்லாததுபோலவே இருக்கிறார். eps

  எம்எல்ஏக்கள், எம்பிக்களை சரிகட்டுவதில்தான் அவரது கவனம் இருப்பதாக சில மக்கள் பிரதிநிதிகளே சொல்கிறார்கள். கேட்டதற்கு ஏரி, குளம், குட்டையை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். காலி  செய்ய சொன்னால் கோர்ட்டுக்கு போகிறார்கள். இப்போது தண்ணீர் வரவில்லை என்றால் எப்படி வரும் என எதிர்கட்சிகள் மீது பலியை போட்டு விடுகிறார்கள். eps

  தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை இருந்தும் ஆயுர்வேத  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் ஓ.பி.எஸ். நிதியை விடுவித்து, நீர் நிலைகளை கண்காணித்து மக்களின் தாகத்தை போக்க வேண்டியவர். அரசியல் காரணங்களுக்காக மக்களின் தாகத்தை தணிக்காமல்  எடப்பாடியுடன் மோதி வருகிறார். ஓட்டு மாறி போட்டதால் எடப்பாடியும், ஓ.பிஎஸும் சென்னைவாசிகளை தண்ணீர் கொடுக்காமல் கண்ணீரில் தவிக்க விடுகிறார்கள் என சென்னைவாசிகள் புலம்பித் தவிக்கிறார்கள்.