வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி! இன்று மாலை நடைபெறுகிறது!

  0
  5
   மாதா

  வேளாங்கண்ணி மாதா தேர்த் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது நாளையுடன் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். திருவிழா நாட்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், மராட்டி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.

  velankkanni

  மேலும் சிலுவைப்பாதை வழிபாடு ஜெபமாலை, நவநாள், ஜெபம், மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை, ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தினமும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (7-ந்தேதி) இரவு 7:30 மணி அளவில் நடைபெறுகிறது. 
  கிறிஸ்தவர்களால் `கீழை நாடுகளின் லூர்து நகரம்’ என அழைக்கப்படுகிற, சிறப்புகள் வாய்ந்த இந்த

  madha

  பேராலயத்தில் இந்த ஆண்டு தேர் திருவிழாவையொட்டி,புனித ஆரோக்கியமாதா பெரிய தேரில் எழுந்தருள தொடர்ந்து 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரியமாதா ஆகியோர் எழுந்தருள்வர். தேர் பேராலய முகப்பில் தொடங்கி கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக பேராலய முகப்பை வந்தடையும்.