வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வரை உதவி தொகை….. பட்டைய கிளப்பும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதி……

  0
  7
  காங்கிரஸ்

  டெல்லி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை உதவி தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

  [17:51, 2/2/2020] Gps: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான ஆத் ஆத்மி ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.க.வோ மற்ற கட்சிகளுக்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

  டெல்லி சட்டப்பேரவை தேர்தல்

  நடுத்தர வர்த்தகத்தினர், வேலையில்லாத இளைஞர்களை கவரும் வகையில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்தால், மாதந்தோறும் வேலையில்லாத இளங்கலை பட்டதாரிகளுக்கு ரூ.5,000ம், முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.7,500ம் உதவி தொகையாக வழங்கப்படும்.

  காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

  வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசம். தலைநகரில் 100 இந்திரா கேண்டீன்கள் தொடங்கி மானிய விலையில் ரூ.15க்கு உணவு வழங்கப்படும். டெல்லியின் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதத்தை மாசு குறைக்கும் நடவடிக்கைகளிலும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் செலவிடப்படும். நீர் மற்றும் மின்சார வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு போடுவோம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளது.