வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

  0
  1
  வாக்குப்பதிவு

  வேலூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

  வேலூர் : வேலூர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

  வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பணம் பட்டுவாடா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று அத்தொகுதிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 1553 வாக்குச்சாவடி மையங்களும், 1998 விவிபாட் கருவிகளும் பயன்பாட்டில் உள்ளன. தேர்தல் பாதுகாப்பு கருதி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடியாகப் பார்க்கப்படும்,  133 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரும், கூடுதல் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  vote

  இந்நிலையில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் வேலூர் தொகுதி மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு முழுமையாக முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள், ராணிப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வாக்கு  எண்ணிக்கையானது வரும் 9 ஆம் தேதி நடைபெறும். 

  vellore

  முன்னதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார்.பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  மக்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும். சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும். நியாயமான முறையில்  வாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுத்துள்ளோம். இளம் வாக்காளர்களுக்கு என் வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.