வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

  0
  1
  கதிர் ஆனந்த்

  வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். 

  வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். 

  வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடந்துமுடிந்த நிலையில்  வாக்கு  எண்ணிக்கை  இன்று நடைபெற்றது.  ஆரம்பத்திலிருந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று வந்தார். இதையடுத்து ஏழாம் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நீண்ட நேர பின்னடைவுக்குப் பிறகு ஏ.சி சண்முகத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறினார். 

  இந்நிலையில் தொடர்ந்து முன்னிலை வகித்த கதிர் ஆனந்த்   இறுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.   கதிர் ஆனந்த் மொத்தம் 4,85,340 வாக்குகளும், அதிமுகவின் ஏ.சி.சண்முக 4,77,199 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தீபலட்சமி 26,995 வாக்குகள் பெற்றுள்ளார். குறிப்பாக வாணியம்பாடியில் அதிமுகவை விட திமுகவுக்கு கூடுதலாக சுமார் 20 ஆயிரம் வாக்குகள் கிடைத்துள்ளது. வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.அணைக்கட்டு, கே.வி குப்பம், குடியாத்தம் தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன

  கதிர் ஆனந்த் வெற்றி உறுதியான நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.கதிர் ஆனந்த் வெற்றியால் மக்களவையில் திமுக எம்.பி.க்களின் பலம் 34 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.